SAP பற்றி மேலும் தெரிந்து கொள்வதற்கு முன் விட்டுப்போன ஒரு சிறிய அறிமுகம். இதன் முழு விரிவாக்கம் Systeme, Andwendungen, Produkte in der Datenverarbeitung (ஜெர்மன் மொழியில்). இதன் ஆங்கில மொழியாக்கம் Systems, Applications, Products in Data Processing. இந்த மென் பொருள் நிறுவனம் 5 முன்னாள் IBM உளியர்களால் 1972ம் வருடம் Walldorf, ஜெர்மனி யில் துவங்கப்பட்டது. உலகின் மென்பொருள்களில் மூன்றாவது இடத்தை பிடித்து மென் மேலும் வளர்ந்துகொண்டிருக்கிறது. சுமார் ஒரு லட்சம் தொழிற்சாலைகள் இதனை உலகெங்கும் பயன்படுத்துகின்றன. SAP யின் நேரடி நிர்வாகதில் 50000 ஊழியர்களும் இதனை பயன்படுத்தும் நிர்வாகங்கள் மூலம் 100000 கும் மேற்பட்ட மென் பொருளாளர்களுக்கும் உணவிடும் அண்ணபூரணி இது. இதில் வேலை பார்பவர்கள் பெரும்பாலும் கணினி தொழில் நுட்பத்தைவிட சம்பந்தப்பட்ட உற்பத்தி / விநியோக / நிதி / பொருள் நிர்வாக தொழில் நுட்பம் தெரிந்தவர்களே அதிகம். இதை கற்க வயது ஒரு தடையல்ல அடிப்படை இளங்கலை இருந்தால் போதும். மூலக் கூறுகளாலான Production Planning, Finance. Sales and Distribution or Quality Management இவை பற்றிய முன்னறிவு இருந்தால் நலம்.
மேலதிக தகவல்களுக்கு
http://www.thespot4sap.com/Articles/TheBasics_1.htm

No comments:
Post a Comment