Wednesday, December 23, 2009

SAP Introduction - Part 4

நீண்ட காலம் கழித்து மீண்டும் தொடர முயற்சிக்கிறேன்.

Enterprise Resource Planning என்னும் கோட்பாட்டை முழுமையாக செயல்படுத்தும் ஒரு மென்பொருள் SAP என்பதை முன்பே கண்டோம். அது எப்படி செயல்படுகிறது என்பதை ஒவ்வொரு பகுதியாக விளக்குகிறேன். ஒரு தொழிற்சாலையின் உற்பத்தி திட்டத்தை மூன்று விதமாக வகைப்படுத்தலாம்.

1. சந்தையில் பொதுவாக விற்க கூடிய பொருள்களை இடைவிடாமல் தயாரித்து விநியோகம் செய்வது.
(உதாரணம் குக்கர், தொலைக்காட்சி போன்றவை - இதை Make to stock உற்பத்தி முறை என்பர்.

2. தனது வாடிக்கையாளர்களிடமிருந்து Order வந்த பிறகு உற்பத்தியை துவங்குவது.
(பிரத்யேகமாக வடிவமைக்க பட்ட வாகனங்கள், நாற்காலி போன்றவை இதில் அடங்கும்.
இதை Make to Order உற்பத்தி முறை என்பர்.

3. தனது வாடிக்கையாளர்களிடமிருந்து Order வந்த பிறகுதான் அதன் வடிவைமைப்பையே (Designing) தொடங்கி பின்
பொருளை தயாரிப்பது. இம்முறையை Design to Order or Engineer to Order எனலாம் . உதாரணம் வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப காட்டப்படும் வீடுகள், வடிவமைக்கப்படும் லிப்ட்கள், மிகப்பெரிய விமானங்கள் கப்பல் போன்றவையின் உற்பத்தி இந்த வகையை சாரும்.

Thursday, October 23, 2008

SAP அறிமுகம் 3

SAP பற்றி மேலும் தெரிந்து கொள்வதற்கு முன் விட்டுப்போன ஒரு சிறிய அறிமுகம். இதன் முழு விரிவாக்கம் Systeme, Andwendungen, Produkte in der Datenverarbeitung (ஜெர்மன் மொழியில்). இதன் ஆங்கில மொழியாக்கம் Systems, Applications, Products in Data Processing. இந்த மென் பொருள் நிறுவனம் 5 முன்னாள் IBM உளியர்களால் 1972ம் வருடம் Walldorf, ஜெர்மனி யில் துவங்கப்பட்டது. உலகின் மென்பொருள்களில் மூன்றாவது இடத்தை பிடித்து மென்  மேலும் வளர்ந்துகொண்டிருக்கிறது. சுமார் ஒரு லட்சம் தொழிற்சாலைகள் இதனை உலகெங்கும் பயன்படுத்துகின்றன. SAP யின் நேரடி நிர்வாகதில் 50000 ஊழியர்களும் இதனை பயன்படுத்தும் நிர்வாகங்கள் மூலம் 100000 கும் மேற்பட்ட மென் பொருளாளர்களுக்கும்  உணவிடும் அண்ணபூரணி இது.  இதில் வேலை பார்பவர்கள் பெரும்பாலும் கணினி தொழில் நுட்பத்தைவிட சம்பந்தப்பட்ட உற்பத்தி / விநியோக / நிதி / பொருள் நிர்வாக தொழில் நுட்பம் தெரிந்தவர்களே அதிகம். இதை கற்க வயது ஒரு தடையல்ல அடிப்படை இளங்கலை இருந்தால் போதும்.     மூலக் கூறுகளாலான  Production Planning, Finance. Sales and Distribution or Quality Management இவை பற்றிய முன்னறிவு இருந்தால் நலம்.

மேலதிக தகவல்களுக்கு 

http://www.thespot4sap.com/Articles/TheBasics_1.htm

SAP அறிமுகம் 2

SAP இன் பயன்பாடுகளை ஒரு கழுகின் பார்வையில் முதலில் பார்ப்போம். ஒரு உற்பத்தி தொழிற்சாலை நன்கு இலாபகரமாக இயங்க வேண்டுமானால் அடிப்படை விதிகள் சில. குறித்த நேரத்தில் குறித்த பொருளை தரக்குறைவு எதுவுமின்றி குறைந்த செலவில் வாடிக்கையாளர்க்கு கொடுக்கவேண்டும். இதனை அடைவைதற்கு தேவையான நிதிநிலைமையை  தொடர்ந்து கண்காணிக்கவேண்டும்.  இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து தரும் செயலைத்தான் SAP செய்கிறது எந்த ஒரு குறைபாடும் இன்றி. ஐம்பது கோடியிலிருந்து ஐம்பதாயிரம் கோடி வரை எல்லா வகை தொழிற்சாலைகளின் தேவைகளும் எல்லா உற்பத்தி முறைகளும் (இத்தனை பற்றி பிறகு சற்று விரிவாக பார்ப்போம்) எல்லா நாடுகளின் எல்லா சட்ட விதிமுறைகளும் முடிந்த அளவு பின்பற்றப்படும் ஒரு மிகப்பெரிய மென்பொருள் சப்.   இது பல்வேறு கூறுகளாக பிரிக்கபட்டிருந்தாலும் அடிப்படை கூறுகள் ஆறு. 

௧. நிதி பிரிவு  ( Finance )
௨ நியம பிரிவு ( Control )
௩. விற்பனையும் விநியோகமும் (Sales and Distribution)
௪. உற்பத்தி பொருள் நிர்வாகம் (Materials Management)
௫ உற்பத்தி திட்டமிடுதலும் நிறைவேற்றலும் (Production Planning)
௬. தர நிர்வாகம். (Quality Management)
   

தொடரும் ....

Wednesday, April 11, 2007

SAPஅறிவோம்

இந்த பதிவு முழுக்க முழுக்க SAP எனப்படும் ஒரு மாபெரும் பயன்பாட்டு மென்பொருள் பற்றியது. இது ERP எனப்பொதுவாக அழைக்கப்படும் (Enterprise resource planning) மென்பொருள் உலகத்தின் முடிசூடா மன்னனாக விளங்கும் SAP பற்றி எனக்குத்தெரிந்தவைகளை சக தமிழர்களோடு பறிமாறிக்கொள்ளும் ஒரு முயற்சி. SAP என்னும் கடலில் என் கால் நகம் நனைந்த உற்சாகத்தில் கடலைப்பற்றி வர்ணிக்கும் ஒரு முயற்சி. பிழைகளை பின்னுட்டமிட்டால் திருத்திக்கொள்வேன். கேள்விகளுக்கு என்னால் முயன்ற அளவு தமிழில் விளக்க முயற்சி செய்வேன். இது முதல் அடி.